தணிந்துவரும்  வெள்ளம்!

Sunday, June 5th, 2016

கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அபாய அளவுக்கு உயர்ந்த பாரிஸ் நகரில் உள்ள செயின் நதியின் நீர்மட்டம், ஒரு வார காலத்துக்குப் பிறகு குறையத் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

முப்பது வருடங்களில் இல்லாத அளவுக்கு செயின் நதியின் நீர் மட்டம் உயர்ந்திருந்தது. அது இயல்பு நிலைக்குத் திரும்ப பத்து நாட்கள் வரை ஆகலாம் என்று துறை சார்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் காரணமாக லூவ்ர் மற்றும் ஆர்சே அருங்காட்சியங்கள் மூடப்பட்டன. தரைதளத்தில் இருந்த ஆயிரக்கணக்கான கலை வேலைப்பாடுகளைக் கொண்ட ஓவியங்களை ஊழியர்கள் பாதுகாப்பாக மேல்தளங்களுக்கு அப்புறப்படுத்தினர்.

கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் பல்லாயிராக்கணக்கான மக்களை வீடுகளை விட்டு வெளியேறச் செய்தது.

ஐரோப்பா முழுவதும் வெள்ளத்தில் குறைந்தது 15 பேர் இறந்துவிட்டதாகவும், அதில் அதிகமானவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

160604000106_france_floods_640x360_getty_nocredit

160603092916_paris_976x549_afp_nocredit

Related posts: