தடுப்பூசி போடாத குழந்தைகளை முன்பள்ளிகளில் சேர்க்க தடை – அரசு தீவிர ஆலோசனை.!

Wednesday, March 15th, 2017

அவுஸ்திரேலியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளை மருத்துவமனை மற்றும் முன்பள்ளிகளில் சேர்க்க தடை விதிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசு தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது.

அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு சில மாகாண அரசுகள் தடுப்பூசி போடாத குழந்தைகளை மருத்துவமனை மற்றும் நர்சரி பள்ளிகளில் சேர்க்க தடை விதித்துள்ளது.ஆனால், இதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த அந்நாட்டு பிரதமரான மால்கம் டர்ன்புல் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.சமீபத்தில் 2000 பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வில் சுமார் 5 சதவிகித குழந்தைகளுக்கு முழுவதுமாக தடுப்பூசி போடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு தாயார் தனது குழந்தைக்கு தடுப்பூசி போட மறுப்பு தெரிவிப்பதால் அவருடைய குழந்தைக்கு மட்டும் ஆபத்து அல்ல.இதனை முன்னுதாரணமாக கொண்டு பலரும் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. அவுஸ்ரேலியா மருத்துவ சங்க தலைவரான Michael Gannon என்பவர் அரசின் இந்த புதிய சட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது, ‘இச்சட்டம் சற்று கடுமையானதாக இருந்தாலும் கூட எதிர்கால சந்தியினரின் ஆரோக்கியத்தை அரசு முக்கியமானதாக கருதுவதால் இச்சட்டத்தை அனைவரும் வரவேற்க வேண்டும்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts: