டுடெர்டேயின் வெளிநாட்டு கொள்கை பற்றிய கவலைகளின் மத்தியில் அவரை வரவேற்கும் ஜப்பான்!

Wednesday, October 26th, 2016

பிலிப்பின்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேயின் வெளிநாட்டு கொள்கைகள் பற்றி ஜப்பானில் கவலைகள் அதிகரித்திருக்கும் நிலையில், அந்நாட்டிற்கு மூன்று நாள் பயணத்தை டுடெர்டே மேற்கொண்டுள்ளார்.கடந்த வாரம் சீனாவில் மேற்கொண்ட பயணத்தின்போது, பிலிப்பைன்ஸூக்கும், ஜப்பானுக்கும் மிக நீண்டகாலமாக நட்பு நாடாக விளங்குகின்ற அமெரிக்காவோடு சார்பை குறைத்து கொள்ள போவதாக அறிவித்தார்.

ஆனால், உறவுகளை மாற்றி கொள்ள திட்டங்கள் இல்லை என்றும், சீனாவோடு வர்த்தக தொடர்பை உருவாக்க விரும்புவதாகவும் பின்னர் அவர் தெரிவித்தார்.பிலிப்பைன்ஸில் வெளிநாட்டு படைப்பிரிவுகள் இருப்பதை வெறுப்பதாகவும், கழுத்தில் கயிறு கட்டிய நாயை போல தன்னுடைய நாட்டை அமெரிக்கா நடத்தக்கூடாது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

_92079734_9aca3b62-e800-40a1-90a3-5e6433dff269

Related posts: