டிரம்ப் பெயரில் புதிய ரயில் நிலையம் – இஸ்ரேல் அமைச்சர்!

Friday, December 29th, 2017

ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த டிரம்ப்புக்கு நன்றி கடனாக, அந்நகரில் அமையவுள்ள சுரங்க ரயில் நிலையத்திற்கு அவருடைய பெயரை வைக்க இஸ்ரேல் அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

டெல் அவிவ் நகரில் இருந்து மேற்குக்கரை பகுதியில் உள்ள ஜெருசலேமுக்கு புதிதாக சுரங்க ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை போக்குவரத்து அமைச்சர் கட்ஸ், அரசிடம் சமர்பித்துள்ளார். ஜெருசலேம் நகரில் உள்ள யூதர்களின் புனித இடமான மேற்குச் சுவரின் அடியில் மற்றும் பழமை நகரம் பகுதியில் ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

பழமை நகரத்தின் அடியில் அமைய உள்ள ரயில் நிலையத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் பெயரை வைக்க விருப்பப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். ஜெருசலமை தலைநகராக அங்கீகரித்துள்ளதற்கு நன்றி கடனாக இது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் மிக முக்கியமான திட்டமான இதன் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு முடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஜெருசலமானது மிக பழமையான நகரம் என்று யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts: