டிரம்ப் கருத்தால் சலசலப்பு!

Sunday, May 28th, 2017

ஜெர்மனியர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று பிரஸ்சல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர், ஜெர்மனியர்கள் மிகவும் மோசமானவர்கள்.

அமெரிக்காவில் எண்ணற்ற கார்களை விற்பனை செய்து கொள்ளை வருமானம் ஈட்டுகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவோம் என பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது, குறுக்கிட்ட ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜங்கர், தடையற்ற வர்த்தகத்தால் ஒவ்வொருவரும் பயனடையத்தான் செய்வார்கள் என ஜெர்மனிக்கு ஆதரவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்புகூட ஜெர்மனியையும், அந்நாட்டின் சான்சலர் ஏஞ்சலா மெர்கலையும் டிரம்ப் தாக்கிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: