டமாஸ்கஸில் சிரியா அரசாங்கம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் பலி!

டமாஸ்கஸின் புறநகரில் போராளிகள் வசமுள்ள பகுதியில் அரசாங்க படையினர் நடத்திய குண்டு தாக்குதலில் 6 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹரிஸ்டா நகரில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றிற்கு அருகே ஷெல் குண்டுகள் வீசப்பட்டதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகமானது தெரிவித்துள்ளது.
பள்ளியின் முதல் இடைவேளை நேரத்தில் இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக ஓர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், கொல்லப்பட்ட 6 குழந்தைகளை தவிர்த்து, மேலும் 25க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
Related posts:
மீனவருக்கு கிடைத்த ரூ.1,455 கோடி மதிப்புள்ள முத்து!
இங்கிலாந்தின் மிகப் பழமையான ஹொட்டலில் தீ விபத்து!
காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் - அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!
|
|