ஜோர்ஜியாவிற்கு வேட்பாளர் அந்தஸ்தை வழங்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தீர்மானம்!

Friday, December 15th, 2023

உக்ரைன் மற்றும் மோல்டோவாவுடன் (Moldova) ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கும், ஜோர்ஜியாவிற்கு வேட்பாளர் அந்தஸ்தை வழங்கவும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் இந்த தீர்மானமானது, தமது நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற பாரிய வெற்றியாகும் என உக்ரைன் ஜனாதிபதி வொளெடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு ஹங்கேரி எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

இதனை ஏனைய உறுப்பினர்கள் அனுமதியளிக்காத நிலையில், ஹங்கேரியின் பிரதமர் கூட்டத்தின் இடைநடுவில் வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து, அதில் பங்கேற்றிருந்த, ஏனைய 22 உறுப்பினர்களும், ஒன்றிணைந்து ஏகமனதாக குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: