தமிழகத்தில் இன்று முழு கடையடைப்பு!

Friday, January 20th, 2017

 

ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.இந்நிலையில், இன்று (20) முச்சக்கரவண்டிகள், வேன்கள், வாடகைக் கார்கள் என்பன ஓடாது என தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வணிகர் நல அமைப்புகள், விவசாய சங்கங்கள், லொரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நாளை முழு கடையடைப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

இதேவேளை, டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியுள்ளார் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

ஜல்லிக்கட்டு மீதான தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டியதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் தன்னிடம் உறுதியளித்ததாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் எனவும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்ததாக தமிழக செய்தித்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது

jallikattu-protest (1)

Related posts: