ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் உறவினர் திடுக்கிடும் தகவல்

Friday, December 1st, 2017

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான் என பெங்க@ரில் இருக்கும் அவரது உறவினர் லலிதா தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா(வயது – 37) இப் பெண் நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள். என்னை அவரது மகளாக அங்கீகரித்து இரத்த வாரிசாக அறிவிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அம்ருதா, கடந்த 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி ஜெயலலிதாவின் மகளாக நான் பெங்களூரில் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி தான் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதா தனக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதனால் சிறு வயதிலேயே என்னை பார்த்தசாரதி – சைலஜா தம்பதிக்கு தத்துக் கொடுத்து விட்டார். எனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடைசி வரை என்னை மகளாக அறிவிக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந் நிலையில், பிரசவம் பார்த்ததாக சொல்லப்படும் ஜெயலட்சுமியின் உறவினர் மகள் லலிதா குறிப்பிடுகையில்: ஜெயலலிதா எனது அம்மாவின் அண்ணன் மகள். ஜெயலலிதாவின் குடும்பத்தார் எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால், சிறுவயதில் இருந்தே பல விடயங்கள் எங்களுக்குத் தெரியும். ஜெயலலிதா நடிகையாக இருந்த போது அவருக்கு ஒருவருடன் தொடர்பு இருந்தது. அவரை இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார் எனவும் தெரிகிறது.

இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பேறு காலத்துக்கு அருகில் இருந்து உதவியவர் என் பெரியம்மா ஜெயலட்சுமி தான். இந்த விடயத்தை வெளியே சொல்லக்கூடாது என ஜெயலலிதா என் பெரியம்மா ஜெயலட்சுமியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். இதனால் என் பெரியம்மா இதனை வெளியே சொல்லவில்லை.

ஜெயலலிதா தனக்குப் பிறந்த பெண் குழந்தையை அவரது நெருங்கிய உறவினரிடம் வளர்க்க கொடுத்தார். அந்த குழந்தை அம்ருதாவா என்பது எனக்குத் தெரியாது. சுந்தேகம் இருந்தால் டி.என்.ஏ.சோதனை செய்து பார்க்கலாம் என்றார்.

Related posts: