ஜி-7 மாநாடு இன்று ஆரம்பம்!

Friday, May 26th, 2017

இத்தாலியின் டார்மினா நகரில் நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் உலகத் தலைவர்கள் சிசிலிக்கு சென்றுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட ஜி-7 நாடுகளின் தலைவர்கள் சிசிலியை சென்டைந்துள்ளனர்.

இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஜரோப்பாவின் அகதிகள் நெருக்கடி, ஆபிரிக்காவின் பொருளாதார முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல், வட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனை, சிரியாவின் உள்நாட்டு யுத்தம் குறித்தும் உலகத் தலைவர்கள் மத்தியில் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, காலநிலை மாற்றம் மற்றும் வர்த்தகத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் போக்கை மென்மையாக்குவதற்கு உலகத் தலைவர்கள் அழுத்தங்களை கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.உலக அரங்கில் தொழில்துறையில் அபிவிருத்தி அடைந்த நாடுகளான இத்தாலி, அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் வருடாந்தம் ஒன்றுகூடி பிராந்திய அபிவிருத்தி, சுகாதாரம், காலநிலை மாற்றம், சக்தி வளங்கள் குறித்து கலந்துரையாடிவருகின்றமை குறிப்பித்தக்கது.

Related posts: