ஜாவா கடலில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!

இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய ஏர் லயன் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘ஏர் லயன்’ பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் கடலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 189 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. 115 அடி ஆழத்தில் விமானத்தின் முக்கிய பாகங்கள் கிடக்கக் கூடும் என கூறப்பட்ட நிலையில் ஏர் லயன் விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.
Related posts:
நிராயுதபாணியான கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க காவல்துறை தகவல்!
நிலக்கீழ் புகையிரத போக்குவரத்து வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது!
கொரோனா வைரஸ்: சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு!
|
|