ஜப்பான் ஏவிய செயற்கைக்கோள் மாயம்!
Tuesday, March 29th, 2016
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் கடந்த மாதம் ஏவப்பட்ட செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முடியவில்லையென அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கருந்துளை உள்ளிட்ட விண்வெளி மர்மங்களை ஆராய்வதற்காக கடந்த மாதம் ஜப்பான் உயரிய தொழில்நுட்பத்துடன்கூடிய செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது.கால் பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளிடமிருந்து வந்துகொண்டிருந்த தகவல்கள் சனிக்கிழமையன்று நின்றுபோயின.
உடைந்த செயற்கைக்கோள் பாகங்களை ஆராய்ந்துவரும் அமெரிக்க ஏஜென்சி அளித்திருக்கும் தகவல்களை தற்போது ஆய்வுசெய்துவருவதாக ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி தெரிவித்திருக்கிறது.
கருந்துளையிலிருந்தும் பிரபஞ்ச வெளியிலிருந்தும் வெளியாகும் எக்ஸ் – ரே கதிர்களை ஆராய்வதற்கான இந்தத் திட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகியவற்றின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்துள்ளன.
Related posts:
|
|
|


