ஜப்பானுக்கு கிடைத்தது மருத்துவம், உடலியலுக்கான நோபல் பரிசு !
Thursday, October 6th, 2016
2016 ஆம் ஆண்டுக்கான மருத்துவ விஞ்ஞானம் மற்றும் உடலியல் விஞ்ஞானம் தொடர்பில் வழங்கப்படும் நோபல் பரிசு, ஜப்பான் நாட்டு விஞ்ஞானியான யொசினோரி ஒசுமி பெற்றுக்கொண்டுள்ளார்.
கலங்கள் தன்னைத்தான் உண்ணும் செயற்பாடு தொடர்பில், அவர் மேற்கொண்ட ஆய்வுகள் மூலமான கண்டுபிடிப்பிற்கே அவருக்கு நோபல் பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது. உடல் கல பாகங்களின் படியிறக்கம் மற்றும் மீள்உற்பத்தி தன்னைத்தான் உண்ணுதல் செயற்பாடு போன்ற அடிப்படை செயற்பாடு தொடர்பிலான தன்னைத்தான் உண்ணுதல் செயன்முறை தொடர்பிலான அவரது ஆய்வின் அடிப்படையிலேயே அவருக்கு நோபல் பரிசு கிடைக்கப்பெற்றது.
1960 களில், கலம் தன்னைத்தான் உண்ணும் விடயம் தொடர்பில் அறியப்பட்டிருந்தது. ஆயினும் ஒசுமியின் கண்டுபிடிப்புகள், கலம் தன்னை எவ்வாறு மீள்உருவாக்கம் செய்கின்றது என்பது தொடர்பிலான தெளிவை வழங்குகின்றது.
புற்றுநோய் மற்றும் நரம்புகள் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு குறித்த கண்டுபிடிப்புகள் (கலங்களின் அழிவு, மீள் உருவாதல்) உதவியளிக்கும் என தெரிவிக்கப்படுவதன் காரணமாக இவ்வாய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Related posts:
|
|
|


