ஜப்பானில் நிலநடுக்கம் !
Monday, September 26th, 2016
ஜப்பானின் தெற்கு ஒகினாவா தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள தீவுகள் கூட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.20 மணியளவில் கடலுக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, ஜப்பானின் வடபகுதியில் உள்ள முக்கிய தீவான ஹொக்கைடோவிலும் பிற்பகல் 2.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாக பதிவாகியுள்ளது.இந்த இரு நிலநடுக்கங்களால் எந்த வித சேதமும் ஏற்படவில்லை, இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
போராளிகளுக்கு பொதுமன்னிப்பு!
சீனாவின் பிரம்மாண்ட மேம்பாலம் இந்த வருட இறுதிக்குள் திறப்பு!
மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் உடல் குடும்பத்தார் இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஹொலிரூட் அரண்மனையில்!
|
|
|


