ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

Wednesday, June 19th, 2019

ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினை அடுத்து யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா பகுதிகளில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரம் இரவு 10.22 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலோரப்பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளபோதிலும் இரவு நேரமாக இருப்பதனால் மக்கள் சுனாமி குறித்து அச்சம் அடைந்துள்ளனர்.

கடலோரப்பகுதிகளில் உள்ள குடியிருப்புக்களில் இருந்து 10,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜப்பானியச் செய்திகள் கூறுகின்றன.

Related posts: