ஜி – 7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இத்தாலி விஜயம்

Monday, June 12th, 2017

 

ஜி – 7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இத்தாலியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு பொலோக்னா (Bologna) பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்தப்படவுள்ள குறித்த கூட்டத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் காலநிலை மாற்றம் குறித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அக்கறை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியம், சிலி, மாலைத்தீவு, ருவாண்டா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சூழலை பாதுகாக்கும் பொருட்டு உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து தங்களால் ஆன அனைத்து உத்திகளையும் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: