ஜப்பானில் கனமழை : மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு!
Thursday, August 29th, 2019
ஜப்பானின் கியூஷூ தீவு முழுவதிலும் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருவதன் காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு உட்பட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
பிரதான பாதைகள் பல சிதைவடைந்துள்ளதோடு, மண்சரிவு அபாய எச்சரிக்ககையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பயணிக்கும் அனைத்து புகையிரத சேவைகளும் முடக்கிவிடப்பட்டுள்ளன.
ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக இதுவரையில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 9 இலட்சத்திற்கு அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
தாய்லாந்தில் தொடர் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி!
நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு - 65 பேர் பலி!
தேர்தல் வன்முறை: ஆப்கானிஸ்தானில் 32 பேர் பலி!
|
|
|


