சௌதி அரேபியாவின் ஆட்சியில் மாற்றம் – பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக அறிவிப்பு!
Wednesday, September 28th, 2022
சவுதி அரேபியாவின் மந்திரி சபையை மாற்றியமைக்கும் அரசானையை சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் வெளியிட்டுள்ளார்.
அதனடிப்படையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராகவும், இளவரசர் காலித் பின் சல்மான் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளவரசர் துர்கி பின் முகமது பின் ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் மாநில அமைச்சராகவும், இளவரசர் அப்துல் அஜிஸ் பின் துர்கி பின் பைசல் விளையாட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கல்வி அமைச்சராக யூசுப் அல் பென் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலக்குகளை அடையும் வரை படைகள் வெளியேறாது - அமெரிக்கா!
பேரிடர் காலங்களில் ஒன்றிணைத்த நடவடிக்கைகள் அவசியம் – பாரதப் பிரதமர் பிரதமர் மோடி வலியுறுத்து!
யாழ்ப்பாணத்தில் கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை - பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்...
|
|
|


