சோதனைகள் மேற்கொள்வதை வடகொரியா தவிர்க்க வேண்டும் – சீனா

Monday, August 7th, 2017

ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு இணங்கி அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மேற்கொள்வதை வடகொரியா தவிர்க்க வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேன்மேலும் ஏவுகணைச் சோதனைகளை மேற்கொள்ள வடகொரியாவைத் தூண்டாத வகையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா தங்களது நடவடிக்கைகள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தின் போது, வடகொரியாவின் வெளியுறவு அமைச்சர் யொங் ஹோவையும் வாங் யீ சந்தித்துள்ளார். வடகொரியா மீது புதிய தடைகளை விதிப்பது என ஐ.நா தீர்மானம் மேற்கொண்டதைத் தொடர்ந்தே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: