ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்!

Friday, August 18th, 2017

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது, யார் தயாரித்தார்கள் என்ற விவரம் 17 ஆண்டுகளாக நடந்த விசாரணை அறிக்கையில் இல்லை என்ற செய்தி வெளியானதையடுத்து ராஜீவ் காந்தி வழக்கில் திருப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தி கொலை வழக்குப் பின்னணியிலுள்ள சதியை விசாரிக்கவில்லை என்று சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ்காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட விதம் குறித்து பல்நோக்கு கண்காணிப்புக் குழு என்று சொல்லப்படும் எம்டிஎம்ஏவின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று மனுதாரர் கூறியிருந்தார்.

மேலும் எம்டிஎம்ஏவின் அறிக்கை தனக்குத் தேவை என்றும் பேரறிவாளன் மனுவில் கோரியிருந்தார்.ஏனெனில் வெடிகுண்டு தயாரிக்க பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பேரறிவாளன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது, யார் தயாரித்தார்கள் என்ற விவரம் 17 ஆண்டுகளாக நடந்த விசாரணை அறிக்கையில் இல்லை என்ற செய்தி வெளியானதையடுத்து ராஜீவ் காந்தி வழக்கில் திருப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக மறு விசாரணை நடத்திய சிபிஐ அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் 23ம் தேதிக்கு இந்த வழக்கின் மறுவிசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts: