கொரிய எல்லையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் முற்றாக நீக்கம்!

Tuesday, May 8th, 2018

நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் வடகொரியாவும் தென்கொரியாவும் கொரிய எல்லையில் பொருத்தியிருந்த தமது ஒலிபெருக்கிச் சாதனங்களை முற்றாக அகற்றியுள்ள நிலையில் இரு கொரியாக்களுக்கிடையிலான எதிர் பிரசார நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

1950 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்குமிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பிளவுபட்ட இரு கொரியாக்களும் கொரிய எல்லையில் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பொருத்திவைத்து எதிர் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தன.

இந்நிலையில் வடகொரிய மற்றும் தென்கொரியத் தலைவர்களுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பன்முன்ஜொம் சமாதானக் கிராமத்தில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்றதைத் தொடர்ந்து விரோத மனப்பான்மையைக் கைவிட்டு ஒற்றுமையுடன் நடக்க இணக்கம் காணப்பட்டது.

இதனையடுத்து இரு தலைவர்களும் நல்லிணக்கச் செயற்பாடுகளை மாறிமாறி முன்னெடுத்துவரும் நிலையில் கொரிய எல்லையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை முற்றாக அகற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: