செப்பு சுரங்க விபத்து : கொங்கோவில் 36 பேர் பலி!

Saturday, June 29th, 2019

கொங்கோ ஜனநாயக குடியரசின் தென் கிழக்கு மாகாணமான லுவாலபா மாகாணத்தில் ஏற்பட்ட செப்பு சுரங்க விபத்தில் குறைந்தது 36 பேர் பலியாகினர் என சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

செப்பு சுரங்கம் ஒன்றை பயிற்றப்படாத முன் அனுபவம் அற்ற தொழிலாளர்கள் தோண்டிய தருணத்திலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக மாகாண ஆளுனர் ரிச்சட் மூயேஜ்  குற்றம்சாட்டியுள்ளார்.

இடிபாடுகளுக்கு இடையே அகப்பட்டுள்ள சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெறுகிறது.

தமது வாழ்வாதாரத்திற்காக சட்டவிரோத சுரங்கம் தோண்டும் செயல்களில் அந்த பிராந்திய மக்கள் ஈடுபடுவது வழமையான விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச செப்பு தேவையின் 50 சத வீதத்திற்கும் அதிகமான உற்பத்தி கொங்கோவினால் வழங்கப்படுகின்றது.

செப்பில் இருந்து பெறப்படும் வெள்ளை நிறத்திலான உலோகம் கையடக்க தொலைபேசி மின்கல உற்பத்திக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் இந்த உலோகத்தின் விலை இரட்டிப்பானதை அடுத்து சட்ட விரோத சுரங்கம் தோண்டும் பணிகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: