சுவர் இடிந்து விழுந்ததில் பாகிஸ்தானில் 9 குழந்தைகள் பலி!
Saturday, October 13th, 2018
பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குலாம் சர்வார் ஷம்பானி கிராமத்தில் உள்ள மண் வீட்டின் அருகில் 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் சிலர் நேற்று விளையாடிக் கொண்டிருந்த வேளையில், மண் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் சுவர் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். இந்த விபத்தில் 7 பெண் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
சர்வதேச பத்திர விற்பனை மூலம் 17 பில்லியன் டாலர்கள் நிதி திரட்டிய சவுதி!
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சத்திரசிகிச்ச...
அமெரிக்கா, ஜெர்மனுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்த இந்தியா திட்டம்!
|
|
|


