சுய கட்டுப்பாடுடன் ஈரான் செயல்பட வேண்டும்: பான் கீ மூன் வலியுறுத்தல்

Friday, March 11th, 2016

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி 1995-ம் ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.ஆனால் தான் அணுசக்தி திட்டங்களை மின் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்துவதாக ஈரான் கூறிவந்தது.

பொருளாதார தடை விதிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு நாடுகளின் வங்கிகளில் ஈரான் வைத்திருந்த 100 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளும் முடக்கப்பட்டது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யை விற்க முடியாத நிலைக்கும் ஈரான் தள்ளப்பட்டது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடுகளுடன் கடந்த ஆண்டு ஈரான் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது.அதைத்தொடர்ந்து பொருளாதார தடைகள் விலக்கி கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் பேலிஸ்டிக் ரக ஏவுகணைகளை பரிசோதனை செய்தது. ராணுவ பயிற்சியின் ஒரு அங்கம்தான் என ஏவுகணை சோதனை ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் உலக நாடுகள் மத்தியில் ஈரானின் ஏவுகணை சோதனை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஈரான் எச்சரிக்கையுடனும் சுயக்கட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தலைவர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது – ஈரான் மீதான பொருளாதர தடை விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், மத்திய கிழக்கு  பிராந்தியத்தில் நிலவும் தற்போதய சூழலையடுத்து, பான் கீ முன் ஈரான் அரசின் ஜனாதிபதிக்கு எச்சரிக்கையுடனும் நல்ல உணர்வுடனும் ஏதேனும் அவசர நடவடிக்கைகளால் பதட்டத்தை அதிகப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts: