இத்தாலி பூகம்பம்பத்தால் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சம்!

Tuesday, November 1st, 2016

மத்திய இத்தாலியில் மூன்று மாத காலத்திற்குள் நான்காவது சக்திவாய்ந்த பூகம்பம் தாக்கியதை அடுத்து அங்குள்ள மக்கள் வாகனங்கள், கூடாரங்கள் மற்றும் தற்காலிக முகாம்களில் இரவுப் பொழுதை கழித்து வருகின்றனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 300 பேர் வரை கொல்லப்பட்ட பூகம்பம் தாக்கிய பகுதிக்கு அருகில் கடந்த ஞாயிறன்று 6.5 ரிச்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இது நாட்டில் பல தசாப்தங்களில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பமாகும்.

கடந்த வாரம் நிகழ்ந்த சக்தி வாய்ந்த பூகம்பத்திற்கு பின்னர் மக்கள் வெளியேற்றப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்த பூகம்பத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படாதபோதும் சுமார் 20 பேர் வரை காயமடைந்தனர். சக்திவாந்த பின்னதிர்வுகள் தொடர்வதால் அங்கு தொடர்ந்தும் ஆபத்தான சூழல் நீடித்து வருகிறது.

நகரின் பல வரலாற்று முக்கியம் வாய்ந்த கட்டடங்களும் சேதமடைந்திருப்பதோடு நோர்சியா நகரின் மத்திய கால சென் பெனடிக்ட் தேவாலயமும் சேதமடைந்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் அழிவுக்குள்ளாகிய அமத்ரைஸில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களையும் இந்த பூகம்பம் அழித்துள்ளது.

coltkn-11-01-fr-04153343035_4960620_31102016_mss_cmy

Related posts: