சீன மீன்பிடி படகு – சரக்கு கப்பல் மோதல்- 17 பேரை தேடும் பணி தீவிரம்!

Saturday, May 7th, 2016

சீன மீன்பிடி படகு ஒன்று வெளிநாட்டு சரக்கு கப்பல் மீது மோதி கிழக்கு சீன கடல் பகுதியில் இன்று மூழ்கியது.  இதில் படகில் பயணம் செய்த 17 பேர் காணாமல் போயுள்ளனர்.

சீனாவின் லு ராங் யூ என்ற மீன்பிடி படகு ஒன்று 19 பேரை சுமந்து கொண்டு சென்றது.  இந்நிலையில் விபத்தில் சிக்கிய இந்த படகில் இருந்து அவ்வழியே சென்ற மீன்பிடி படகுகளில் இருந்தவர்கள் 2 பேரை மீட்டுள்ளனர்.  தேடும் பணி தொடருகிறது.  தொடர்ந்து மீட்பு பணியும் நடந்து வருகிறது.

கிழக்கு சீன கடலின் எந்த பகுதியில் இந்த விபத்து நடந்தது மற்றும் சரக்கு கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.  கிழக்கு சீன கடல் பகுதியானது சீனா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடும் பகுதி ஆகும்.  சீன மீன்பிடி படகுகள் மற்றும் ஜப்பானின் ரோந்து கப்பல்கள் தொடர்புடைய சம்பவங்கள் இரு நாடுகளின் தூதரக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related posts: