ரஷ்யாவின் plasma laser ஆயுதம்..! அதிர்ச்சியில் உலகம்!

Monday, January 23rd, 2017

உலகின் பெரும்பாலான நாடுகளில் மத்தியில் ஆயுத உற்பத்தி என்பது மிக வேகமாக அதிகரித்துள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், பாதுகாப்பு, வியாபாரம் நோக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆயுத உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

குறிப்பாக வல்லரசு நாடுகள் அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், வல்லரசு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சில நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகின்றன.

இன்று நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஆயுத உற்பத்தியில் ரஷ்யா நாட்டின் புதிய முயற்சி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் லேசர் ஒளிக்கற்று கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும் அவற்றை ஆயுதங்களாக பயன்படுத்துவதற்கு இன்னும் தயாராகவில்லை. பொதுவாக சினிமாவில் இவ்வாறு லேசரை ஆயுதமாக பயன்படுத்துவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதனை நிஜமாக்கும் முயற்சியில் தற்போது ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் லேசர் கதிரை ஆயுதமாகக் கொண்டுள்ள ஆயுதம் ஒன்றை நகரும் ஜீப் வண்டி ஒன்றில் பொருத்தியுள்ளனர். இந்த ஆயுதத்தை கொண்டு நகரக் கூடிய பொருட்களை கூட தாக்க முடியும் என ரஷ்யா நிரூபித்து காட்டியுள்ளது. இவை plasma laser ஆயுதம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, எலக்ரோ மக்னடிக் பல்ஸ் என அழைக்கப்படும் மின் காந்த புலத்தை நேர்த்தியாக வடிவமைத்து, அதனை எறிகணை ஒன்றி பொருத்தி வெடிக்க செய்யும் நோக்கில் அமெரிக்கா புதிய ஆயுதம் ஒன்றை தயார் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ரஷ்யாவின் புதிய ஆயுத தயாரிப்பு குறித்து செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும், இவ்வாறான ஆயுதங்கள் எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுதும் என்பது மட்டும் நிச்சயமான ஒன்று.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: