சீன நிதி வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க சீனா நடவடிக்கை!

Sunday, October 30th, 2016

நாட்டிற்கு வெளியே மக்கள் பணபரிமாற்றம் மேற்கொள்ள அனுமதித்த சட்டத்தை சீன ஆட்சியாளர்கள் நீக்கியுள்ளதால் ஹொங்கொங்கில் ஆயுள் காப்பீடு பெற்றுகொள்ள சீனாவிலுள்ள வங்கிகளின் பண அட்டைகளை தனிநபர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய காப்பீடுகள் சீனாவின் “யுவான்” நாணயத்தில் பொதுவாக வாங்கப்பட்டு, பின்னர் இன்னொரு வெளிநாட்டு நாணயத்தில் பொதுவாக அமெரிக்க டாலரில் பணமாக்கப்படுகிறது.

சீனாவில் இந்த புதிய விதிமுறை அமலாவதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை இரவிலேயே இத்தகைய ஆயுள் காப்பீடுகளை வாங்க பலர் விரைந்துள்ளனர்.

சட்டப்பூர்வமற்ற முறையில் முதலீடு வெளியேறுவதை சீன அரசு தடுத்து வருகிறது.கடந்த ஆண்டு ஒரு டிரில்லியன் டாலருக்கு (ஒரு இலட்சம் கோடி) மேலாக சீனாவை விட்டு வெளியேறியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

_92144810_65799c75-0f3c-4741-b57d-42cf9621d68f

Related posts: