சீனா மத்தியஸ்த்தம் : இந்தியா நிராகரிப்பு!
காஷ்மீர் விடயத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்த்தம் வகிக்க சீனா முன்வந்துள்ள போதும், இந்தியா அதனை நிராகரித்துள்ளது. இந்தியா, காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆனால் அதற்கு மூன்றாம் தரப்பு ஒன்றின் பங்களிப்பு அவசியம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாமல் இருப்பதற்கான பிரதான காரணம், ஒருநாடு இந்தியாவுக்குள் எல்லைத்தாண்டி தீவிரவாதிகளை திணிப்பதே ஆகும். இது உலக அளவில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இதேநேரம், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் சிக்கிம் பிரச்சினைக்கு மத்தியில், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இந்த வாரம் சீனா செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|
|


