சீனாவில் விபத்துக்குள்ளான எண்ணெய்த்தாங்கி கப்பலில் வெடிப்பு!

Monday, January 15th, 2018

சீனாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான எண்ணெய்த்தாங்கிக் கப்பல், நேற்றையதினம் வெடித்துள்ளதைத் தொடர்ந்து, நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.

இந்தக் கப்பல் வெடித்தபோது, சுமார் 800 முதல் ஆயிரம் மீற்றர் உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்ததாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஸாங்காய் மாகாணத்தில், பனாமா நாட்டுப் பதிவுடைய ஸாஞ்சி எண்ணெய்த்தாங்கிக் கப்பலும், ஹொங்கொங் நாட்டுப் பதிவுடைய சிஃஎப். கிறிஸ்ரல் சரக்குக் கப்பலும் ஒன்றுடனொன்று மோதி கடந்த வாரம் விபத்துக்குள்ளாகின. இதன்போது, ஈரானைச் சேர்ந்த 30 மாலுமிகளும்;; பங்களாதேஷைச் சேர்ந்த 2 மாலுமிகளும் காணாமல் போயுள்ள நிலையில், மூவரின் சடலங்களை மாத்திரம்; கண்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணெய்த்தாங்கிக் கப்பல், ஈரானிலிருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் தொன் எண்ணையைத் சுமந்துகொண்டு வந்த அதேவேளை, சரக்குக் கப்பல் சுமார் 64 ஆயிரம் தொன் தானியங்களை அமெரிக்காவிலிருந்து சுமந்துகொண்டு சீனாவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: