சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் – 200க்கும் அதிகமானோர் பாதிப்பு!
Wednesday, January 22nd, 2020
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை மூன்று பேர் பலியானதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வைரஸ் தொற்றானது சீனாவின் பீஜிங், சங்ஹாங், மற்றும் சென்ஷான் ஆகிய மாகாணங்களில் அதிகளவில் பரவிவரும் அதேவேளை, தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் தற்சமயம் கண்டறியப்பட்டுள்ளது.
ஹூவான் மாகாணத்தில் மாத்திரம் 200க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக அது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட மருத்துவ குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சிரியாவில் முழுமையான போர் நிறுத்தத்திற்கு மீண்டும் பேச்சுவார்த்தை!
துருக்கி-சிரியா உயிரிழப்பு 24,000 - இடிபாடுகளில் இருந்து 10 நாட்களேயான சிசு மீட்பு - சர்வதேச ஊடகங்கள...
ரயில் தடம் புரண்டதில் 22 பேர் உயிரிழப்பு - 80ற்கும் மேற்பட்டோர் காயம் – பாகிஸ்தானில் சோகம்!
|
|
|


