சிரியாவில் முழுமையான போர் நிறுத்தத்திற்கு மீண்டும் பேச்சுவார்த்தை!

Friday, September 9th, 2016

சிரியாவில் முழுமையான போர் நிறுத்தம் கொண்டு வருவது பற்றி அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவு அமைச்சர் சர்கே லாவ்ரோஃபும் புதிய சுற்று பேச்சுவார்த்தையை ஜெனீவாவில் ஆரம்பித்துள்ளனர்.

அலெப்போ நகரில் குண்டு தாக்குதல் நடத்துவதையும், அதன் முற்றுகையையும் நிறுத்த ரஷியா அழைப்பு விடுக்க அமெரிக்கா விரும்புகிறது.

அவ்வாறு செய்தால், ஜிகாதி குழுக்களுக்கு எதிராக ரஷியாவோடு போர் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.ஆனால், அங்கு நடைபெற்றுள்ள சமீபத்திய முன்னேற்றத்தை பார்த்தால், அந்நகரத்தின் மீதான சிரியா அரசு படையின் பிடி இறுகி வருவதாக தெரிகிறது.

ரஷியா நேரத்தை வீணடிக்க, வெறுமனே பேச்சுவார்த்தை என கூறி விளையாடி வருவதாக எண்ணினால், பேச்சுவார்த்தையை அமெரிக்கா முடித்துக் கொள்ளும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

160908183100_aleppo_640x360_reuters_nocredit

160908183322_aleppo_640x360_reuters_nocredit

Related posts: