சீனப் பெருஞ்சுவருக்கு கீழே செல்லவுள்ள புதிய ரயில் – சீனா தெரிவிப்பு!
Thursday, September 29th, 2016
சீனப் பெருஞ்சுவருக்கு கீழே உலகின் மிகப் பெரிய மற்றும் ஆழமான அதி விரைவு ரயில் நிலையத்தைக் கட்டும் திட்டத்தினை சீனா அறிவித்துள்ளது.
2022- ஆம் ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்தும் சீனா, அப்போட்டிகள் குறித்து தயாராக எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி இதுவாகும். குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்தும் ஜங்ஜாகூ நகரத்தை, பீஜிங்குடன் ஒரு புதிய ரயில் இணைக்கவுள்ளது.
தலைநகர் பீஜிங்க்கு தென் மேற்காக 80 கிலோ மீட்டர் தொலைவில் பெருஞ்சுவர் வளாகத்தில் அதிக மக்கள் வருகை புரியும் பகுதியான படாலிங்கில் இந்த புதிய ரயில் நிற்கும்.உலக பாரம்பரியம் மிக்க தளத்தை சேதப்படுத்தாத வண்ணம் இந்த ரயில் நிலையம் நிலத்தடியில் மிக ஆழமாக கட்டப்படவுள்ளது.

Related posts:
வாராந்தம் ஏவுகணை சோதனை நடத்தப்படும் - வட கொரியா!
ஒகி சூறாவளியின் தாண்டவத்தில் சின்னாபின்னமாகுமா சென்னை?
ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அறிவிப்பு!
|
|
|


