வாராந்தம் ஏவுகணை சோதனை நடத்தப்படும் – வட கொரியா!

Tuesday, April 18th, 2017

வாராந்தம் தாம் ஏவுகணை சோதனை நடத்துவோம் என வடகொரியா பகிரங்கமாக அறிவித்துள்ளதை அடுத்து சர்வதேச அரங்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவிலான கண்டனங்கள் மற்றும் அமெரிக்காவுடனான இராணுவ அழுத்தங்கள் அதிகரித்திருக்கும் சூழலிலும், வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் வாராந்த, மாதாந்த மற்றும் வருடாந்த அடிப்படையில் மேலும் பல ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வோம் என வடகொரிய துணை வெளிவிவகார அமைச்சர் ஹான் சோங்-ரையோல் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தால்” முழுமையான போர் ஏற்படும் என ஹான் சோங்-ரையோல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வடகொரியா ஏவுகணை சோதனைகளை முன்னெடுக்க கூடாதென அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் முன்னதாக எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், வடகொரியாவுடன் அமைதிப்போக்கை கடைப்பிடித்த காலம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே சூடான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், தென்கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்த பின்னர், நேற்று மைக் பென்ஸ் தென்கொரியாவின் சோல் நகரை சென்றடைந்தார்.

இதன்போது பென்ஸ், தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதி ஹ்வாங் க்யோ-அன்னை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்காக தங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடுமானால் தாம் தமக்குரிய பாணியில் அணுவாயுத தாக்குதலை மேற்கொள்வோம் என வடகொரிய துணை வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: