சிறையில் கலவரம் : பிரேசில் 25 பேர் பலி!
Monday, October 17th, 2016
பிரேசிலின் வடக்கிலுள்ள போவா விஸ்தா சிறைச்சாலையில் போட்டி கும்பல்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதில் சிலர் தலை வெட்டப்பட்டும், பிறர் உயிரோடு தீ வைத்து கொளுத்தியும் கொல்லப்பட்டுள்ளனர்.சிறைச்சாலையில் இருந்த ஒரு குழுவினர் இன்னொரு சிறைப்பிரிவிற்குள் தடிகளோடும், கத்திகளோடும் நுழைந்தபோது, இந்த கலவரம் தொடங்கியது.
சிறப்பு காவல்துறையினர் சிறைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் தொடுத்து, சிறை ஒழுங்கை மீட்டுள்ளனர்.பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த சுமார் நூறு பார்வையாளர்களை காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

Related posts:
சீனாவின் நடவடிக்கை: தென்னாசிய பிரந்தியத்தில் பெரும் பதற்றம்!
எல்லையில் மீண்டும் ஆர்ப்பாட்டம் - பலஸ்தீனத்தில் பதற்றம்!
இந்தியா மீதான தடையை நீக்கும் ஐக்கியர அரபு அமீரகம்!
|
|
|


