சிறிய வடிவில் அணு ஆயுதங்களை உருவாக்கியது வட கொரியா!

Friday, March 11th, 2016

அணு ஆயுதங்களை ஏவுகணைகளில் பொருத்தும் வகையில் மிகச் சிறிய வடிவில் வடகொரிய விஞ்ஞானிகள், வெற்றிகரமாக தயாரித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களை மிகச் சிறிய வடிவில் உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றிருப்பாக வடகொரியா ஏற்கெனவே தம்பட்டம் அடித்து வந்தநிலையில், முதன்முறையாக திட்டவட்டமாக இதனை அறிவித்துள்ளார். விஞ்ஞானிகளின் இந்த சாதனை வட கொரியாவின் அணு ஆயுத திறனில் மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கும் என அழர் கூறஇயுள்ளார்.

தெர்மோ நியூக்ளியர் ஆயுதங்கள் சிறிய வடிவில் தயாரிக்கப்பட்டிருப்பதாக கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் வடகொரியா அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வெடித்து சோதனை செய்தது.

இதுதொடர்பாக வடகொரியா வின் அதிகாரப்பூர்வ ஊடக செய்தி நிறுவனம் கேசிஎன்ஏ, “ சிறிய வடிவில் அணு ஆயுதம் உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம் ஏவுகணைகளில் அவற்றைப் பொருத்த முடியும். ‘இதுதான் உண்மையான அணு அச்சுறுத்தல்’ என கிம் தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

வடகொரிய ஆளும் கட்சியின் செய்தித் தாளான ரோடாங் சின்முன், தனது முதல் பக்கத்தில் கோள உருவத்தின் பின்னணியில் கிம் படத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு விளக்கக் குறிப்பு அளிக்கப்படவில்லை.

வடகொரியாவின் அணுசக்தி திட்டங்கள் போதுமான அவகாசத் தைக் கடந்து விட்டன. மிகச்சிறப்பாக சிறிய வடிவில் ஏவுகணைகளில் பொருத்தும் அணு ஆயுதம் வடிவமைக்கப்பட்டு விட்டது என, மிடில்பர்ரி பல்கலைக்கழக பேராசிரியர் மெலிசா ஹன்ஹம் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவையும் அமெரிக்காவையும் அணு குண்டு வீசி அழித்து சாம்பலாக்கி விடுவோம் என கிம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது

Related posts: