சிரிய அகதிகள் தங்கியுள்ள முகாமைப் பார்க்க ஐரோப்பியக் குழு விஜயம்!
Sunday, April 24th, 2016
துருக்கியில் சிரிய நாட்டு அகதிகள் தங்கியுள்ள முகாம் ஒன்றை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய உயர் அதிகாரிகள் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
சிரியாவுடனான துருக்கியின் எல்லைக்கு அருகே கஜியன்டெப் என்ற இடத்தில் உள்ள அந்த அகதி முகாமின் நிலைமைகனை நேரில் சென்று பார்வையிட அவர்கள் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகலிடக் கோரிக்கையாளர்களின் நெருக்கடியை கையாள்வதற்கு துருக்கியுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தையும் அவர்கள் ஊக்குவிக்க உள்ளனர்.
ஒப்பந்தத்தின் படி ஐரோப்பாவிற்கு சீரற்ற வகையில் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களை துருக்கி அழைத்துக் கொள்ளும் எனவும் அதற்கு ஈடாக துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி வழங்குவதுடன் துருக்கி பிரஜைகளுக்கு விசா கட்டுப்பாடு இன்றி ஐரோப்பாவினுள் பயணிப்பதற்கு வாய்ப்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதனை நடைமுறைபடுத்துவதில் சட்ட சிக்கல்கள் குறித்த கவலைகளும் உள்ளன
Related posts:
உயிருடன் இருப்பவர்களுக்கு பதாகை வைக்கக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்!
இலண்டனில் 39 சடலங்கள் மீட்பு!
தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்து!
|
|
|


