சிரியா அரசுப் படைக்கு எதிரான தாக்குதல்: ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!

Sunday, October 2nd, 2016

சிரியாவின் அரசப் படைப்பிரிவுகளுக்கு எதிராக எவ்வித இராணுவ நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்று ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்திருக்கிறது.

அமெரிக்கா அத்தகைய தலையீடு எதையாவது மேற்கொண்டால், அது மத்திய கிழக்கு முழுவதும் கொடிய, பெரிய விளைவுகள் என்று அவர் கூறுகின்ற நிலைமைகளுக்கு இட்டு செல்லும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் பெண் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

ரஷ்யாவின் நண்பரான சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் நீக்கப்பட்டால் ஏற்படும் அதிகார வெற்றிடம், பயங்கரவாதிகளால் விரைவாக நிரப்பப்பட்டுவிடும் என்று அவர் கூறியிருக்கிறார். அலெப்போ நகரில் குண்டு தாக்குதலை தொடர்வதில் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் தீவிர முறுகல் நிலை தோன்றிருக்கும் நேரத்தில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

bf3f78d4ae6c1070

Related posts: