சிரியாவில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் மக்கள் துயரம்!
Wednesday, September 28th, 2016
சிரியாவின் கிழக்கு அலெப்போ நகரில், விமானத் தாக்குதல்களை அடுத்து, அங்குள்ள இரண்டு பெரிய விபத்து சிகிச்சை மருத்துவமனைகளும் செயல்படவில்லை என்று சிரியா – அமெரி்க்க மருத்துவ அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
போரின் பிடியில் சிக்கியுள்ள கிழக்கு அலெப்போவில், மூன்று லட்சம் மக்களுக்கு வெறும் 6 தீவிர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே உள்ளன. காயமடைந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு கோரி்க்கை விடுத்துள்ளது.
இழந்த பகுதிகளை மீட்பதற்கு தரைவழித் தாக்குதல்களைத் துவக்குவதற்காக, சிரியப் படைகளும் போராளிக் குழுவினரும் பெருமளவில் படைகளைக் குவித்து வருகின்றனர்.
கடந்த எட்டு நாட்களாக நடக்கும் சண்டையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக கிளர்ச்சியாளர் பிடியில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். போராளிகளின் பிடியில் உள்ள பகுதிகளில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், தாங்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டுவிடுவோம் என அஞ்சுவதாகவும் பொதுமக்கள் கூறியுளளனர்.

Related posts:
|
|
|


