சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளைஊக்குவித்தார்- ஜனாதிபதியின் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்கின்றது பிரித்தானியா!

Tuesday, March 16th, 2021


சிரிய ஜனாதிபதியின் மனைவி அஸ்மாஅல் அசாத்திற்கு எதிராக பிரிட்டிஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அஸ்மா பயங்கரவாதத்தினை ஊக்குவித்து அதனை தூண்டினா என்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிரிட்டிஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிரிய மோதல் தொடர்பில் தங்களிடம் பாரப்படுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுத்த குற்றச்சாட்டு பிரிவின் அதிகாரிகள் இந்த பாரப்படு;த்தல் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.


குர்னிகா என்ற மோதல்களை மையமாககொண்ட சர்வதேச சட்ட நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிறுவனம் அடிப்படை மனித உரிமை மீறல் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நாடு கடந்த வழக்குகளை கையாள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சிரியாவின் முதல்பெண்மணி குற்றங்களில்ஈடுபட்டார் என்ற குற்றசாட்டு காணப்படுவதாக இந்த நிறுவனத்தின் ஸ்தாபகர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய நடவடிக்கைகளை முதல் பெண்மணி தூண்டினார் என குறிப்பிட்டுள்ள அவர் படையினரை சந்தித்தார்,பகிரங்க அறிக்கைகளை விடுத்தார்,இராணுவத்தினரின் நடவடிக்கைகளை புகழ்ந்தார் இதன் காரணமாக ஆயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்பிற்கு காரணமாகயிருந்தார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts: