சிரியாவில் உள்ள துருக்கி படையினர் தொடர்பில் எர்டோகன் கருத்து!

Tuesday, February 14th, 2017

ரக்காவில் உள்ள ஜிகாதிகளை விரட்டியடிப்பதற்காகவும் அல் – பாப் நகரில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை முற்றாக அழிப்பதற்காகவுமே துருக்கி துருப்புக்கள் சிரியாவுக்கு படையெடுத்ததாக துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் ஷ தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர் துருக்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

துருக்கியின் எல்லையில் உள்ள சிரியாவின் அல் – பாப் நகரில் சிரிய துருப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும், குறித்த தாக்குதல்களுக்கு துருக்கி இராணுவம் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சிரியாவின் ரக்கா மற்றும் மன்பிஜ் ஆகிய நகரங்களே எமது அடுத்த முக்கிய இலக்குகளாக காணப்படுகின்றன. எமது குறிக்கோள்கள் தொடர்பில் நாம் தற்போதுள்ள அமெரிக்க நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம்” என தெரிவித்துள்ளார்.

சிரியாவின் மேற்குறித்த பகுதிகளில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் குர்தீஷ் போராளிகள் ஆகியோர் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர் துருக்கி துருப்புக்கள் சிரியாவில் இருந்து வெளியேறுவர் எனவும் எர்டோகன் உறுதியளித்துள்ளார்.

kk_mini-1-720x480

Related posts: