சிம்பாப்பேயின் புதிய ஜனாதிபதி நியமனம்!
Thursday, November 23rd, 2017
இராணுவத்தினரால் முயற்சியால் சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக 37 ஆண்டுகள் பதவி வகித்த ரொபர்ட் முகாபே விலகியுள்ளார். அவரை பதவி விலக நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அண்மையில் சிம்பாப்வே இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
இதனை அடுத்து ஆளும் காட்சியான சானு பி.எஃப் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி அழுத்தம் கொடுத்தது. பின்னர் நாடாளுமன்றத்தில் குற்றப்பிரேரணை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் முகாபே பதவி விலகுவதாக அறிவித்தார்.
இந்தநிலையில் அவருக்கு பதிலாக முன்னாள் உப ஜனாதிபதி எமர்சன் ங்காக்வா சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
Related posts:
சீனாவின் நடவடிக்கை: தென்னாசிய பிரந்தியத்தில் பெரும் பதற்றம்!
இணையசேவைகள் குழப்பம்!
கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
|
|
|


