சிங்கப்பூரில் ஸிக்கா வைரஸினால் இருவர் பாதிப்பு!
Friday, March 31st, 2017
சிங்கப்பூரில் இரண்டு ஸிக்கா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சிங்கப்பூரின் தேசிய சுற்றாடல் முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் ஸிக்கா (Zika) வைரஸினால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களென முகவர் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.400 வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் 120 வீடுகள் சுகாதார பிரிவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பாலூட்டும் தாய்மார்கள் 10 பேரும், இப்பகுதியில் இருந்துள்ளனர். இவர்கள் தொடர்பில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
பிரபல பாடகர் யேசுதாஸுக்கு பத்ம விபூஷண் விருது!
படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!
முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் – ஈரானில் நான்கு பேர் பலி!
|
|
|


