சிங்கப்பூரில் இருந்து சென்னை நோக்கிய இண்டிகோ விமானத்தில் சாம்சங் நோட் 2 தொலைபேசியில் தீ!
Friday, September 23rd, 2016
சிங்கப்பூரில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் சாம்சங் நோட் 2 தொலைபேசி இருந்து புகை வெளியேறிய சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இண்டிகோ விமானத்தில் பேக்குகள் வைக்கப்படும் இடத்தில் இருந்து புகை வெளியேறி உள்ளது. உடனடியாக விமான பணியாளர்கள் எங்கிருந்து வருகிறது என்று அடையாளம் கண்டனர்.
புகையானது ரேக்கில் வைக்கப்பட்டிருந்த கை பையில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளே பார்க்கையில் சாம்சங் நோட் 2வில் இருந்து தீ பிளம்பு பொங்கியது காணப்பட்டது. இதனையடுத்து அதனை அணைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
உடனடியாக விமானத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் கொள்கலன் ஒன்றில் நீர் நிரப்பட்டது. அதனுள் சாம்சன் நோட் வைக்கப்பட்டது. விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது.

Related posts:
இஸ்தான்புல்லில் தாக்குதலில் 39 பேர் பலி: தாக்குதல்தாரியை தேடிவரும் போலிஸார்!
டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் தொடர்பில் மேலும் தகவல்
முடக்க நிலையை படிப்படியாக நீக்க ஜேர்மன் முடிவு - அதிபர் அஞ்சலா மேக்கல்!
|
|
|


