முஸ்லிம் தடை குறித்த வாசகங்கள்: டிரம்ப் வலைத்தளத்திலிருந்து தற்காலிக நீக்கம்!

Saturday, November 12th, 2016

தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்களுக்குத் தடை விதிப்பதாக டொனால்டு டிரம்ப் கூறிய வாசகங்கள், அவரது தேர்தல் பிரசார வலைதளத்திலிருந்து புதன்கிழமை நீக்கப்பட்டன. எனினும், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதைத் தொடர்ந்து, அந்த வாசகங்கள் இணையதளத்தில் மீண்டும் இடம்பெற்றன.

இதுகுறித்து டிரம்ப்பின் தேர்தல் பிரசார நிர்வாகிகள் கூறியதாவது:

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேர்தல் பிரசார வலைதளத்தில் இடம் பெற்றிருந்த சில வாசகங்கள் மறைந்தன. தற்போது அது சேர்க்கப்பட்டுள்ளது என்றார் அவர். சான் பெர்னாடிகோ, கலிபோர்னியா ஆகிய பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்காவில் முஸ்லிம்கள் அனுமதிக்குத் தடை விதிக்கப் போவதாகக் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

Untitled

Related posts: