சிகிச்சை பெற்று வரும் முதல்வரை நேரில் சென்று பார்த்த அமைச்சர்கள்!

Friday, September 23rd, 2016

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அ.தி.மு.க அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளருமான ஜெயலலிதா நேற்று வியாழன் இரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் உடலில் நீர் சத்து குறைந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை தரப்பு விளக்கமளித்தது.

இச்சூழலில், செய்தியை அறிந்து அப்போலோ மருத்துவனையில் நள்ளிரவு முதல் அ.தி.மு.க தொண்டர்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மருத்துவமனை அமைந்துள்ள க்ரீம்ஸ் சாலையில் குவியத் தொடங்கினார். இதனால், மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இன்றைய தினம் அதிகாலையில் இருந்தே தொண்டர்கள் அப்போலோ மருத்துவமனையை நோக்கி வரத் தொடங்கியதால் அண்ணா சாலை முதல் நுங்கம்பாக்கம் வரை க்ரீம்ஸ் சாலை மொத்தமாக மூடப்பட்டது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள சிறப்பு வார்டில் ஜெயலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவமனையின் உள்ளேவும், வெளியேவும் தீவிர போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் தீவிர சோதனைகளுக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

jayalalitha

Related posts: