சவுதி இளவரசர் உலங்குவானூர்தி விபத்தில் பலி!
Monday, November 6th, 2017
ஏமன் அருகே இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் சவுதி இளவரசர் மன்சூர் பின் மோக்ரன் உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர் அசிர் மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்தார். நேற்று(05) அதிகாரிகளுடன் இவர் சென்ற ஹெலிகப்டர் சவுதி அரேபியா-ஏமன்எல்லையில் விபத்தில் சிக்கியது. அதில் இவருடன் ஹெலிகப்டரில் இருந்த அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
மன்சூர் பின் மோக்ரன் உயிரிழந்த செய்தியை அல்-எக்பரியா செய்தித் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆனால் குறித்த விபத்துஏற்பட்டதற்குரிய காரணம் வெளியாகவில்லை. ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக 11 இளவரசர்கள் அமைச்சர்கள் மற்றும் தொழில்அதிபர்களை சவுதி அரேபிய அரசு கைது செய்துள்ள நிலையில் இளவரசர் மன்சூர் பின் மோக்ரனின் மரணம் நிகழ்ந்துள்ளது.
Related posts:
புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா!
அறுவடைகளை 18தொடக்கம் 24 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளுங்கள் - வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணை...
சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் – அமைச்சர் தினேஷ்...
|
|
|


