சவுதி அரேபியாவில் தீவிரவாத தாக்குதலில் இரு போலிஸ் அதிகாரிகள் பலி!
Sunday, September 18th, 2016
சவுதி அரேபியாவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் இரு போலிஸார் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதியின் கிழக்கு நகரமான டாமனில் அதிகாரிகள் கார் ஒன்றில் பயணித்தப்படியே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது, இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்ட போது, இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஷியா பிரிவினரை அதிகம் கொண்ட நகரமாக டாமன் விளங்குகிறது.
சுன்னி பிரிவினர் ஆதிக்கம் நிறைந்த ராஜியத்தில், ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடந்த காலங்களில் போலிஸ் மீது தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
மக்ரோங் உறுதுணையாக இருப்பார்- தெரேசா மே!
கிறிஸ்துமஸ் காலத்தில் பயங்கரவாத தாக்குதல் - சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!
சினாபொங் எரிமலை கரும்புகையுடன் வெடித்தது!
|
|
|


