வடகொரியாவுக்கு வருமாறு தென்கொரியா அதிபருக்கு அழைப்பு!

Sunday, February 11th, 2018

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தென்கொரியாவுக்கு சென்றுள்ள வடகொரியா அதிபரின் தங்கை, தங்கள் நாட்டுக்கு வருமாறு தென்கொரியா அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழாவில் பங்கேற்க வடகொரிய பாராளுமன்ற தலைவர் கிம் யாங் நம் தலைமையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் உள்ளிட்டோர் குழுவாக சென்றிருந்தனர்.

தென்கொரியா அதிபரின் மாளிகையில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விருந்தின்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் எழுதி இருந்த கடிதத்தை தென்கொரியா அதிபர் மூன் ஜே-விடம் கிம் யோ ஜாங் அளித்தார். தென்கொரியா-வடகொரியா இடையிலான உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக அந்த கடிதத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் குறிப்பிட்டிருந்ததாக தென்கொரியா அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும், வடகொரியாவுக்கு வருமாறு அந்நாட்டின் அதிபர் சார்பில் அவரது தங்கை தென்கொரியா அதிபர் மூன் ஜே-வுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: