சவுதி அரேபியவில் திரைப்பட அனுமதி: 15 நிமிடங்களில் திரையரங்கு நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை!

சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்கான தடை நீக்கப்பட்ட பின்னர் சவுதி அரேபியோவின் தலைநகர் ரியாத் நகரில் முதன்முதலாக கட்டிமுடிக்கப்பட்ட முதல் திரையரங்கில் முதல்நாள் முதல் காட்சிக்கான நுழைவுச்சீட்டுக்கள் 15 நிமிடங்களில் விற்பனைசெய்யபட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை திறக்கப்பட்ட இந்த திரையரங்கில் ஹாலிவூட் திரைப்படமான ‘பிளாக் பான்தர்ஸ்’ முதல் படமாக திரையிடப்பட்டது.
இந்த படத்தின் முதல்நாள் முதல் காட்சிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுக்களும் முதல் 15 நிமிடங்களில் இணையத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மற்ற காட்சிகளும் ‘ஹவுஸ் புல்’ ஆக ஓடிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சவுதி அரேபியா அரசாங்கம் கடந்த 35 ஆண்டுகளாக சினிமாக்களை திரையிட தடை விதித்தது.
Related posts:
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா !
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கென 53 பில்லியன் நிதியில் கடனுதவி – ஒப்புதலளித்தது இலங்கை மத்த...
தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனையை எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது - சபாநாயகர் ...
|
|